பைக் எடுக்கும்போது கவனம்

72

தற்போது மழை நேரம் என்பதால் கதகதப்பாக இருப்பதற்காக பாம்புகள் அதிக அளவில் வெளியேறி வரும். வரும் பாம்புகள் பைக்குகளில் ஏறி இருக்க வாய்ப்புகள் உண்டு.

சமீபத்தில் தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை அடுத்த சொர்ணபூமி பகுதியை சேர்ந்த சண்முகவேல் என்பவரது மகன் முப்பிடாதி. இவர் அப்பகுதியில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டீ குடிப்பதற்காக வீட்டிலிருந்து பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவரது காலில் ஏதோ கடித்தது போல இருந்துள்ளது.சாதாரண பூச்சியாக இருக்கும் என முப்பிடாதி அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து வண்டியை ஓட்டியுள்ளார்.

ஒரு கட்டத்தில் அவர் வண்டியை பார்க்க உள்ளே பாம்பு இருந்துள்ளது. அதை விரட்ட முயன்றபோது அது சீட்டுக்குள் சென்று விட்டது. உடனே வனத்துறையினர் வரவழைக்கப்பட்டு பாம்பு வனத்திற்குள் கொண்டு விடப்பட்டது.

இந்நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் முப்பிடாதியை செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த முப்பிடாதி தற்போது குணமடைந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பாருங்க:  நாளை முதல் நெடுஞ்சாலைகளில் பாஸ்ட் டேக் கட்டாயம்