வேறு ஆண்களுடன் உல்லாசம் – காதலன் தற்கொலை!

244
வேறு ஆண்களுடன் உல்லாசம் - காதலன் தற்கொலை

தான் உயிராக கருதிய பெண் தோழி வேறு ஆண்களுடன் தகாத உறவை கொண்டிருந்ததால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் மேற்கே அந்தேரி பகுதியில் உள்ள உயர்தர சலூன் கடையில் மேனேஜராக பணிபுரிந்து வந்தவர்  ஷோபித் சிங். இவர் கடந்த 13ம் திடீரென காணமல் போனார். எனவே, அவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர் பணிபுரிந்து வந்த கடையின் உரிமையாளர் என அனைவரும் தேடி வந்தனர். ஆனால், அவர் கிடைக்கவே இல்லை.

இந்நிலையில், அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து அவரின் நண்பர் பங்கஜ் சவுகான் என்பவர் கண்டெடுத்தார். அந்த கடிதத்தில் தனது பெண் தோழியை அதிகமாக நேசித்ததாகவும், அவரோடு வாழ்நாள் முழுவதும் வாழ ஆசைப்பட்டதாகவும் ஷோபித் குறிப்பிட்டிருந்தார். மேலும், அப்பெண், வேறு சில ஆண்களுடன் தகாத உறவு வைத்திருந்தார். அது குறித்து கேட்டதற்கு என்னை அப்பெண்ணும், அந்த ஆண்களும் தன்னை தாக்கியதாகவும், என் மீது பாலியல் புகாரை கொடுக்கப்போவதாக மிரட்டுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

எனவே, தனது தற்கொலைக்கு அவர்களே காரணம் எனவும் கூறி அவர்களின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே, மும்பை போலீசார் அந்த பெண்ணையும், அவரின் காதலியையும் தேடி வருகின்றனர். இந்நிலையில், அந்தேரிக்கு மேற்குபகுதியில் மிகவும் அழுகிய நிலையில், ஷோபித்தின் உடலை போலீசார் கண்டெடுத்துள்ளனர்.

பாருங்க:  வெளியான வீடியோ ; காம கொடூரன் மோகன்ராஜ் சிக்கியது எப்படி? : பகீர் தகவல்