Tamil Flash News
முகேஷ் அம்பானி ஸ்டாலின் திடீர் சந்திப்பு…
ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவரான முகேஷ் அம்பானி நேற்று இரவு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
முகேஷ் அம்பானியின் இளைய மகள் ஈஷா அம்பானியின் திருமணம் கடந்த டிசம்பர் மாதம் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில், அவரின் சகோதரரும், முகேஷ் அம்பானியின் மகனுமான ஆகாஷ் அம்பானியின் திருமணம் வருகிற மார்ச் மாதம் 9ம் தேதி நடக்கவுள்ளது.
எனவே, முகேஷ் அம்பானி பலரையும் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்து வருகிறார். நேற்று மும்பையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவர், கார் மூலம் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் வீட்டிற்கு வந்தார். அவருடன் அவரின் மனைவி நீடா அம்பானியும் வந்திருந்தார்.
அதன்பின் ஸ்டாலினிடம் சிறிது நேரம் பேசிய அவர், தனது மகனின் திருமண பத்திரிக்கையை கொடுத்ததாக தெரிகிறது. அங்கு உதயநிதிஸ்டாலின், அவரின் மனைவி கிருத்திகா உள்ளிட்ட பலரும் இருந்தனர்.