பிக்பாஸ் வீட்டில் இசைக்கச்சேரி நடக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
90 நாட்களை கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எனவே யார் வெற்றி பெறப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக கவின், தர்ஷன் இருவரும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டனர். தற்போது பிக்பாஸ் வீட்டில் முகேன், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் என 4 பேர் மட்டுமே உள்ளனர்.
இந்நிலையில், ஒரு இசைக்கச்சேரி பிக்பாஸ் வீட்டில் நடக்கிறது. முகேன் பாடகர் என்பதால் அவர் பாட, அவருடன் விஜய் டிவியில் இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் சில பாடகிகளும் அவருடன் பாடும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.
முகேன் ஒரு பாடகர். அவர் குரலில் பாடல்கள் பாடி வீடியோ ஆல்பமாக ஏராளமான பாடல்களை அவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Day100 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/JaAgpPesO4
— Vijay Television (@vijaytelevision) October 1, 2019