mugen

பிக்பாஸ் வின்னர் யார் தெரியுமா? – கசிந்த செய்தி இதுதான்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றி போட்டியாளர் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

கமல்ஹாசன் பங்கேற்று நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளையோடு முடிவடையவுள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டில் சாண்டி, முகேன், லாஸ்லியா, ஷெரின் ஆகிய 4 பேர் மட்டுமே உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் முதல் பரிசை பெறப்போகும் போட்டியாளர் நாளை அறிவிக்கப்படவுள்ளார். ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு முகேன் தேர்வாகியுள்ளார். மேலும், அவர்தான் இந்த சீசனின் வெற்றிப் போட்டியாளர் என செய்திகள் வெளியாகியுள்ளது.

mugen

இந்நிலையில், அவர்தான் முதல் பரிசை பெறும் போட்டியாளர் என செய்திகள் கசிந்துள்ளது. முகேன் முதலிடத்திலும், 2ம் பரிசு சாண்டி, 3ம் பரிசு லாஸ்லியா,4ம் இடத்தில் ஷெரின் என இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனாலும், நாளை கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.