எம்.எஸ் ராஜேஸ்வரி எம்.எஸ் சிறுவயதில் இருந்தே இவரின் பாடல்களை கேட்டு வியக்காத நபர்கள் இல்லை.
80களுக்கு பின்பு வந்த பெரும்பாலான படங்களில் குழந்தையின் குரலுக்கு ஜானகியின் குரலே பாடலில் பின்னணியாக ஒலிக்கும். அது ஆண்குழந்தையானாலும் பெண்குழந்தையானாலும் அதற்கேற்றவாறு மாற்றிப்பாடும் லாவகம் ஜானகிக்கு மட்டுமே உண்டு.
ஆனால் அதற்க்கு முன்பே 60,70களில் பல குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் பெரிய நட்சத்திரங்களுக்கும் குழந்தைக்குரலில் பாட்டு பாடியவர்தான் இந்த எம்.எஸ் ராஜேஸ்வரி.
டவுன் பஸ் படத்தில் இடம்பெற்ற சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா பாடலை கேட்காதவர்கள் இருக்க முடியாது.
குழந்தையும் தெய்வமும் படத்தில் இடம்பெற்ற கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே கோழிக்குஞ்சு ரெண்டுமிப்போ அன்பில்லாத காட்டிலே பாடல் யாருடைய கண்களையும் ஒரு கை பார்த்து கண்ணீரை வரவைத்து விடும்.கைதி கண்ணாயிரம் படத்தில் இடம்பெற்ற கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும் என்ற பாடலில் இடையில் குழந்தை டெய்சிராணிக்காக சுசீலாவுடன் ஓங்கி ஒலிக்கும்.
இவரது பாடலில் பலர் மனதை மிக மிக கொள்ளையடித்த பாடல் என்றால் மாப்பிள்ளை மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே மிக அருமையான பாடல்.
சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம் அதில் சோளத்தட்டை பல்லாக்கிலே ஊர்வலமாம் என்று அனைத்து பாடல்களுமே குழந்தை குரலில் அற்புதமாக ஒலிக்கும்.
மாஸ்டர் கமலஹாசனுக்காக கமல்ஹாசனின் முதல் படமானஅம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடல் இன்றளவும் நிலைத்திருக்கும் இனிய பாடல் . பராசக்தி படத்தில் இடம்பெற்ற ஓ ரசிக்கும் சீமானே வா பாடல் அன்றைய இளசுகள் இன்றைய இளசுகள் வரை துள்ளாட்டம் போடவைக்கும் பாடல்.
இளையராஜாவின் இசையில் நாயகன் படத்தில் இடம்பெற்ற நான் சிரித்தால் தீபாவளி பாடலை இவரும் பிரபல பாடகி ஜமுனாராணியும் இணைந்து பாடி இருந்தனர்.
இது போல பாடல்கள் வருவது தற்போது அரிதாகி விட்ட நிலையில் இனி இப்படி பாடல்கள் பாடகிகள் வரப்போவதுமில்லை என்ற வருத்தத்தில் அந்தக்கால சினிமா ரசிகர்கள் உள்ளனர்.
கடந்த 2018 ஏப்ரலில் தனது 86வயதில் எம்.எஸ் ராஜேஸ்வரி அவர்கள் காலமானார்கள்.