teacher - MP High court confirm hanging to teacher

4 வயது சிறுமியை நாசம் செய்த ஆசிரியருக்கு தூக்கு…

மத்திய பிரதேசத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது.

2018ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் சாட்னா மாவட்டத்தில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். உயிருக்கு போராடிய நிலையில் மந்சாவுர் நகரத்தில் மீட்கப்பட்ட சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

இந்த விவகாரம் நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எனவே இதுபற்றி விசாரணை செய்த போலீசார் கடந்த 2018 ஜூலை மாதம், உத்சேரேவில் உள்ள பள்ளி ஆசிரியர் மஹேந்திர சிங்(27) கோனட் என்பவரை கைது செய்யப்பட்டது. தனது குற்றத்தை அவரும் ஒப்புக்கொள்ள அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் மாதம் தூக்கு தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து மகேந்திர சிங் ம.பி. உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

அவரின் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அவரின் தூக்கு தண்டனையை உறுதி செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.