cinema news
கலக்கலாகி வரும் ரஜினியின் ஓம்காரம்
ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளிக்கு அண்ணாத்தே படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தில் ரஜினிகாந்த், நயன் தாரா, மீனா, குஷ்பு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இமான் இசையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.
இந்த மோஷன் போஸ்டரில் ரஜினிகாந்த் பேசிய டயலாக்குடன் வெளியிடப்பட்டுள்ளது.
நாடி நரம்பு முறுக்க முறுக்க ரத்தம் மொத்தம் கொதிக்க கொதிக்க அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க தொடங்குது ஓம்கார கூத்து என்ற வசனத்தை ரஜினிகாந்த் பேசுவது போல மோஷன் போஸ்டர் உள்ளது.
இந்த வசனங்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது.