வளை விரித்த பாஜக.. ஆப்பு வைத்த மோகன்லால்

479

கேரளாவில் பாஜக வேட்பாளராக மோகன்லாலை களம் இறக்க பாஜக செய்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.


திருப்பூரில் சில அஜித் ரசிகர்கள் பாஜகவில் இணைய, அஜித்தே பாஜகவில் சேர்ந்துவிட்டது போல் தமிழிசை சவுந்தராராஜன் பேட்டி கொடுக்க, நேரிடையாகவும், மறைமுகமாகவும் அரசியல்லு வரும் எண்ணம் தனக்கு இல்லை என அஜித் அறிக்கை வெளியிட்டு தமிழிசையின் மூக்கை உடைத்தார்.


அதேபோல், கேரளாவில் நடிகர் மோகன்லாலை பாஜகவிற்கு இழுக்கும் முயற்சிகள் நடைபெற்றது. திருவனந்தபுரம் தொகுதியில் அவரை நிறுத்த விரும்புகிறோம் என கேரள பாஜக மூத்த தலைவர் ஓ.ராஜகோபால் கூற்யிருந்தார்.
ஆனால், நேற்று அறிக்கை வெளியிட்ட மோகன்லால், எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. வரும் பாராளுமன்றத்தில் எந்த தொகுதியிலும் போட்டியிடமாட்டேன் எனக் கூறிவிட்டார்.


எனவே, அஜித்தை தொடர்ந்து மோகன்லாலும் பாஜகவிற்கு ஆப்பு வைத்துவிட்டார் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாருங்க:  சிவகார்த்திகேயனுக்கு வலைவிரிக்கும் தெலுங்கு சினிமா! சம்மதிப்பாரா?