மோகன் ராஜாவின் தெலுங்கு பட பணிகள் துவக்கம்

22

நடிகர் ஜெயம் ரவியின் அண்ணன் இயக்குனர் மோகன்ராஜா. தமிழில் வந்த எம்.குமரன் சன் ஆஃப் மஹாலட்சுமி, தனி ஒருவன், வேலாயுதம். வேலைக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இவர்.

இவர் சமீபத்தில் அந்தாதூன் படத்தை ரீமேக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அந்த படத்தில் இருந்து விலகி தனக்கு வந்த தெலுங்கு பட வாய்ப்பான அதுவும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்று மோகன்லால் நடிப்பில் வந்த லூசிபர் என்ற திரைப்படத்தின் ரீமேக்தான் தற்போது இவர் இயக்க இருக்கும் படமாகும்.

ஹைதராபாத்தில் இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக தமன், கலை இயக்குநராக சுரேஷ் செல்வராஜன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். மார்ச் மாதத்தில் படப்பிடிப்புக்குச் செல்ல படக்குழு ஆயுத்தமாகி வருகிறது.

பாருங்க:  மன்னார்குடியை தொடர்ந்து பிரபலமாகி வரும் ஈரோடு