Entertainment
மோகன் நடித்த உருவம் திகில் படம்- 31 ஆண்டுகள் நிறைவு
இயக்குனர் ஜி.எம் குமாரின் இயக்கத்தில் கடந்த 1991ல் வெளிவந்த திரைப்படம் உருவம். இப்படத்தில் மோகன், ஆர்.பி விஸ்வம், பல்லவி முதலானோர் நடித்திருந்தனர்.
செய்வினை, பில்லி, சூனியம் ஏவல் இதை மையப்படுத்தி வந்த இந்த படத்தில் மோகன் மிக கொடூர முகம் உள்ளவராக நடித்திருந்தார்.
அழகான ஹீரோவாக வலம் வந்த மோகன் இப்படத்தில் திகிலூட்டும் விதத்தில் கோர முகத்துடன் நடித்து இருந்தார்.
மோகன் பிஸியான ஷெட்யூலில் நடித்துக்கொண்டிருந்த காலத்தில் 80ஸ் 90ஸ் டாப் ஹீரோவாக மக்கள் கருதிக்கொண்டிருந்த காலத்தில் மோகனுக்கு அந்த நேரத்தில் வந்த கடைசி படமாக இது இருந்தது.
இந்த படத்துக்கு பிறகு பல வருடங்கள் கழித்தே மோகன் திரையில் மீண்டும் என் ட்ரி கொடுத்தார்.
உருவம் படம் வந்து இன்றுடன் 31 வருடங்கள் நிறைவு பெறுகிறது. கடந்த 15.03.1991ம் வருடம் இப்படம் வெளிவந்தது.
