cinema news
இயக்குனர் மோகன் பெயரில் போலி ஐடி ஆரம்பித்து தவறான தகவல்
திரெளபதி படத்தை இயக்கியவர் மோகன். இவர் பெயரில் அச்சு அசலாக அதே போலவே யாரோ ஒருவர் டுவிட்டரில் ஃபேக் ஐடி ஆரம்பித்துள்ளார். ஆரம்பித்ததோடு மட்டுமல்லாமல் பாமக தலைவர் ராமதாஸையும் அவரது கட்சியினரையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பாமக ஆதரவாளரான மோகன் இப்படி செய்துள்ளாரா என பலரும் அதிர்ச்சியான நிலையில் அது ஃபேக் ஐடி என மோகன் தெரிவித்துள்ளார்.
இப்படி செய்பவர்கள் சரியானவர்களாக இருக்க முடியாது என கடுமையான முறையில் ஃபேக் ஐடி ஆரம்பித்தவனை திட்டியுள்ளார் மோகன்.