Latest News
இந்தியா அரசு மன்னிப்பு கேட்க இஸ்லாமிய நாடுகள் வலியுறுத்தல்
அண்மையில் வட இந்திய சேனல் ஒன்றில் விவாத நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா என்பவர் இஸ்லாமியர்களின் குரு என்று அழைக்க கூடிய முகமது நபியை பற்றி தவறுதலாக பேசியதாக சொல்லப்படுகிறது.
இந்த பிரச்சினை சர்ச்சையாகிய நிலையில் பாரதிய ஜனதா செய்தி தொடர்பாளர் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் இது குறித்து இஸ்லாமிய நாடுகள் குறிப்பாக கல்ஃப் கண்ட்ரீஸ் என அழைக்கப்படக்கூடிய வளைகுடா நாடுகள் அனைத்தும் இந்திய தூதரகத்திடம் 200 கோடிக்கும் அதிகமான இஸ்லாமியர்களை இது புண்படுத்தியுள்ளதாகவும் இது தொடர்பாக இந்திய தூதரகத்திடம் அந்தத்த நாடுகள் விளக்கம் கேட்டுள்ளன.
மேலும் இந்தியா அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.இதனிடையே இந்த பிரச்சினை குறித்து கருத்து கூறியுள்ள இந்தியா, இது நூபுர்சர்மாவின் தனிப்பட்ட கருத்து, இந்திய அரசின் கருத்தல்ல, அப்படி பேசியது தவறுதான் என இந்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
