அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது.
இன்னும் சில மாதங்களில் நாடு நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. மேலும், அந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தை, மதிமுக, இந்திய கம்யுனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகள் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் கட்சியான அதிமுக தனித்துப் போட்டியிடுமா அல்லது கூட்டணி அமைக்குமா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால், தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என துணை முதல்வர் ஓ.பி.எஸ் சமீபத்தில் அளித்த பேட்டியின் மூலம் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் என்பது உறுதியானது.
இந்நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையேயான தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி விரைவில் திருப்பூருக்கு வர இருக்கிறார். அந்த மேடையில் அவர் அதிமுக – பாஜக கூட்டணியை அறிவிப்பார் எனத் தெரிகிறது.