இந்திய பிரதமராக மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், வருகிற 30ம் தேதி அவர் பதவியேற்கவுள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 350 இடங்களை பெற்று பாஜக எந்த கட்சியுடன் ஆதரவும் இல்லாமல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. ஆட்சி அமைக்க 272 இடங்கள் வேண்டும் என்கிற நிலையில், பாஜக தனியாக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், இன்று மலை டெல்லியில் பாஜக கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மோடி, அமித்ஷா, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அமைச்சரவையில் யாரெல்லாம் இடம்பெறப்போகிறார்கள் என்பது பற்றியும் ஆலோசனை செய்யப்பட்டது. அதன்பின் புதிய எம்.பிக்கள் மோடியை பிரதமராக தேர்வு செய்தனர். மேலும், அவரை தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராகவும், பாஜக நாடாளுமன்ற குழு தலைவராகவும் ஒரு மனதாக தேர்வு செய்தனர். வருகிற 30ம் தேதி மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.