Latest News
மோடி மீது சித்தராமையா கடும் தாக்கு
தற்போது கடுமையான கொரோனா தொற்றால் உலக மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரதமர் மோடி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, மோடி குறித்து கூறி இருப்பதாவது .
எந்த நோக்கமும் இல்லாமல் நீங்கள் மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றுவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை. இதனால் வைரஸ் மறைந்து விடாது. முதல்வர்களுக்கு பாடம் கற்பிக்க நீங்கள் ஒன்றும் தலைமை ஆசிரியர் அல்ல. மாநில அரசுகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் உங்கள் பொறுப்பை காட்டுங்கள் என சித்தராமையா கூறியுள்ளார்.