Corona (Covid-19)
மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு ! மோடி அறிவிப்பு!
இந்தியாவில் இன்றோடு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு முடியும் நிலையில் மே மூன்றாம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10000 ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் இன்றோடு மோடி அறிவித்த 21 நாட்கள் ஊடங்கு முடியும் நிலையில் மீண்டும் மே 3 ஆம் தேதி நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
சற்று முன்னர் வீடியோ மூலம் மக்களிடம் பேசிய மோடி மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அவரது பேச்சியில் ‘இந்திய மக்கள் அனைவரும் போர்வீரர்களாக மாறி கொரோனாவுக்கு எதிரானப் போரில் செயல்பட்டு வருகின்றனர். இதில் பலரும் சிரமங்களை அனுபவிக்கின்றனர் என்பதை நான் அறிவேன். அனைத்தையும் விட இந்திய மக்களின் உயிரே முக்கியம் என்ற விதத்தில் அரசு செயல்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அடுத்த ஒரு வாரம் மிகவும் முக்கியமானது’ என அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் சில அத்தியாவசிய வேலைகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என அறிவித்துள்ள மோடி அப்போது விதிமுறைகளை சரியாகக் கடைபிடிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.