நாளை திருப்பூர் வருகிறார் மோடி – பாதுகாப்பு பணிகள் தீவிரம்

285

இந்திய பிரதமர் மோடி நாளை திருப்பூர் வரவுள்ளதால் தமிழகத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி நாளை திருப்பூர் அருகேயுள்ள பெருமாநல்லூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வருகிறார். இதற்காக 70 ஏக்கர் மைதானம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு மேடை அமைக்கப்பட்டு வருகிறது.  அங்கு பல்வேறு அரசு நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார். அதேபோல், சென்னை வண்ணாரப்பேட்டை – டி.எம்.எஸ் இடையேயான மெட்ரோ ரயில் சேவையை காணொலி மூலம் தொடங்கி வைக்கிறார்.

இதனால், திருப்பூரில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும் படியாக யாரவது திரிந்தால் போலீசாருக்கு தகவல் அளிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தனியார் விடுதி  உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிமுக – பாஜக கூட்டணியை இந்த மேடைடையில் மோடி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், மோடியின் இந்த வருகை பிரச்சார நோக்கத்தை குறி வைத்தே அமைந்திருக்கும் என கருதப்படுகிறது.

பாருங்க:  மீண்டும் இன்று மக்களிடம் பேசுகிறார் மோடி? எதிர்பார்ப்பை ஏற்றிய தகவல்!