பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இன்று காலை 9 மணி அளவில் மக்களிடம் பேசியுள்ளார்.
அந்த உரையில்: “ஊரடங்கை கடைபிடித்து வரும் மக்களுக்கு நன்றி, நாட்டு மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிரான போரில் பங்கெடுத்துள்ளனர். மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். இந்தியாவின் ஊரடங்கு உலக நாடுகளுக்கு முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம்” நன்றி உரையுடன் மற்றொரு வேண்டுகோளையும் வைத்துள்ளார்.
அதில் வரும் ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9.09 மணி அனைவரும் மின் விளக்கு அணைத்துவிட்டு தீபம், டார்ச், மொபைல் வெளிச்சத்தை மட்டும் காட்டுங்கள். இது கொரோனா பணிகளை உற்சாகப்படுத்தும். நம் ஒற்றுமையை உலகிற்கு காட்டும்.
ஆனால், இந்த அறிவிப்பு பல மக்களுக்கு எரிச்சலுட்ட செய்துள்ளது. அவர்களின் மனதில், “ஆங்காங்கே உண்ண உணவின்றி, சொந்த ஊர் செல்ல வழியின்றி நடந்தே செல்கின்ற அவல நிலையில் நம் நாட்டு மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, டார்ச் லைட்டை அடித்து காட்டுவதால் நம் நிலையை மாறிவிடப் போகிறதா? என்ற கோபத்துடன் கூடிய ஏக்கமான குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதோடு விட்டு விடாமல் இன்னும் சிலர் கோபத்தின் உச்சத்திற்கே சென்று நாடு இருக்கிற நிலைமையில, இதெல்லாம் தேவையா? என மைண்ட் வாய்ஸில் முனுமுனுத்து வருகின்றனர்.