Latest News
திருக்குறளும் மோடியும் பிரிக்க முடியாத சக்திகள்- குஷ்பு
நடிகை குஷ்பு சில மாதங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார் அது முதல் தொடர்ந்து பாஜகவின் கூட்டங்களில் பாஜகவின் கருத்துக்களை சீரிய முறையில் பேசி வருகிறார். அப்படியாக பிரதமர் மோடியையும் தமிழின் உன்னத நூலான உலக பொதுமறை திருக்குறளையும் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
2019ஆம் ஆண்டில் அவர் பாங்காக் சென்றிருந்தபோது திருக்குறளின் தாய்லாந்து மொழிபெயர்ப்பு விழா நடந்தது அதில் பேசிய வெளியிடும் விழாவில் இதுமட்டுமல்ல 2017ல் திருக்குறளின் குஜராத்தி மொழிபெயர்ப்பையும் வெளியிடும் பேறும் தனக்கு கிடைத்ததற்காக உள்ளப்பூர்வமாக தான் மகிழ்ச்சி அடைவதாக அவர் அந்நிகழ்வில் கூறினார்
பழமையான, தொன்மையான மொழி தமிழ்” என சுட்டிக்காட்டும் பிரதமர் மோடி திருவள்ளுவரைப் பற்றி குறிப்பிடும் இடங்களில் எல்லாம் “நாம் நன்றாக வாழ்வதற்காக திருவள்ளுவர் எனும் மகாமுனிவர் தந்த மந்திர நூல் என குறிப்பிடுகிறார்.
மகாத்மா காந்தி திருக்குறளை மூல நூலாக படிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் தமிழ் கற்க விரும்புவதாக ஒருமுறை சொல்லியுள்ளார். நமது பாரதப்பிரதமர் மாண்புமிகு திரு.மோடி ஜி அவர்களோ ஒருபடி மேலே போய் திருக்குறளை கற்றதன் மூலம், திருக்குறளின் அரிய சிந்தனைகளை தான் பேசும் இடங்களில் எல்லாம் மேற்கோள் காட்டுவதன் மூலம், ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்பான தமிழர்களின் அறிவுக் கருவூலத்தை உலகெங்கும் பரப்புவதன் மூலம் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் பெருமை சேர்த்துவருகிறார்.
