எம்.எல்.ஏக்கள் சம்பளம் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது

19

தற்போது கொரோனாவுக்கு நிவாரண நிதி அளிக்கும் பொருட்டு பலரும் தங்களால் முடிந்த இயன்ற பணத்தை முதல்வரின் நிவாரண நிதிகு வழங்கி வருகிறார்கள். பல திரைப்பட நடிகர்கள், தொழிலதிபர்கள் என பலரும் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பெரிய அளவில் நிதிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்களின் மாத சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்தனர்.

இது குறித்து முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பது.

திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் ஒரு கோடியே 37 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயை #Donate2TNCMPRF-க்கு என அரசு தலைமைக் கொறடா முனைவர் கோவி.செழியன் அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார்.

எப்போதும் மக்கள் நலன் போற்றும் இயக்கமாக – அரணாக தி.மு.க. நிற்கும்! இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

பாருங்க:  தந்தை இயக்கிய படத்தை நினைவு கூர்ந்த ஆதி
Previous articleஇயக்குனர் மணிரத்னத்தின் பிறந்த நாள் இன்று
Next articleஉலக சுகாதார நிறுவனத்துக்கு கமல் கண்டனம்