Latest News
முக.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நன்றி
இலங்கையில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பொருளாதார நெருக்கடியால் அனைத்து அத்தியாவாசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் அதிக விலை உயர்வாகவும் உள்ளது. இதனால் பல மக்கள் இந்தியாவிற்கு அகதிகளாகவும் வந்துள்ளனர்.
இப்படியொரு கொடூரமான சூழலில் இந்திய அரசு பல்லாயிரம் டன் அரிசி, பல ஆயிரம் லிட்டர் எரிபொருட்கள் மற்றும் காய்கறிகளை அந்த நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்த சூழ்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் 40 ஆயிரம் டன் அரிசி உட்பட பல நிவாரண பொருட்களை இலங்கை அரசுக்கு அனுப்ப சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
அந்த பொருட்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அனுமதியுடன் இலங்கை அனுப்பபட்டது. இந்த நிலையில் இலங்கை பொருளாதார நெருக்கடியை அண்டை நாட்டு பிரச்சினையாக பார்க்காமல் மனிதாபிமான அடிப்படையில் உதவியதற்கு நன்றி என இலங்கை அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.