அதிமுக அரசை கலைக்கும் முயற்சி – முடிவை மாற்றிய மு.க.ஸ்டாலின்

248
அதிமுக அரசை கலைக்கும் முயற்சி - முடிவை மாற்றிய மு.க.ஸ்டாலின் 01

அதிமுக ஆட்சியை கலைப்பது பற்றி திமுக தலைவர் ஸ்டாலின் எடுத்துள்ள முடிவு திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக செய்தி கசிந்துள்ளது.

நடந்த முடிந்த பாராளுமன்ற தேர்தல் 38 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்ற இடைத்தேர்தல்களில் 13 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே, 9 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக தனது ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது.

அதிமுக அரசை கலைக்கும் முயற்சி - முடிவை மாற்றிய மு.க.ஸ்டாலின்

தற்போது திமுக பக்கம் 101 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். அதிமுக பக்கம் 119 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இதில், கலைச்செல்வன், ரத்தின சபாபதி ஆகியோர் திமுகவுன் இணக்கமாக இருக்கிறார்கள், அதேபோல் கருணாஸ், தனியரசு ஆகியோரும் அதிமுகவுக்கு எதிரான மனநிலையிலே இருக்கின்றனர். எனவே, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை ஸ்டாலின் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அந்த முடிவை ஸ்டாலின் கைவிட்டு விட்டதாக தெரிகிறது. முதல் காரணம் 22 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என ஸ்டாலின் நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், இரண்டுமே நடக்கவில்லை.

மேலும், ஏற்கனவே அதிமுக ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதால்தான் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, இன்னும் 2 வருடங்களில் மக்களிடம் மேலும் அதிருப்தியை சம்பாதிக்கும். எனவே, தேவையில்லாமல் இப்போது ஆட்சியை கலைக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டாம் என ஸ்டாலின் கருதுவதாக திமுக வட்டாரத்தில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது.

தற்போது திமுகவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே, 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கண்டிப்பாக திமுக மாபெரும் வெற்றியை பெற்று ஆட்சியை பிடிக்கும் என ஸ்டாலின் கணக்குப் போடுவதாக தெரிகிறது.

பாருங்க:  புரவி புயல் முதல்வரின் எச்சரிக்கை