cinema news
இந்திய கிரிக்கெட் கேப்டன் மித்தாலி ராஜ் ஆக நடிக்கும் டாப்ஸி
இந்திய கிரிக்கெட் கேப்டனாக பணியாற்றியவர் மித்தாலி ராஜ். இவர் இந்திய மகளிர் கிரிக்கெட் கேப்டனாக இவர் சில வருடங்கள் இருந்தார்.
இந்திய கிரிக்கெட்டில் சிறந்த மகளிர் பேட்ஸ்மேனாக இவர் கருதப்படுகிறார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் இருப்பினும் இவர் பிறந்த மாநிலம் ராஜஸ்தான்.
இந்திய மகளிர் கிரிக்கெட்டில் எண்ணிலடங்கா சாதனைகளை மிதாலி ராஜ் படைத்துள்ளார்.
மிதாலிராஜின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஒரு படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் பெயர், சபாஷ் மித்து. இந்த படம் வரும் ஜூலை 15ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் மிதாலி ராஜாக நடிகை டாப்ஸி நடித்துள்ளார். தமிழில் ஆடுகளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் டாப்ஸி. இந்த படத்தை கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.