Latest News
கூவாகம் திருவிழா- மிஸ் கூவாகமாக சென்னையை சேர்ந்த திருநங்கை தேர்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற ஊரான கூவாகம் என்ற ஊர். இந்த ஊரில் உள்ள அரவான் கோவிலில் வருடத்துக்கு ஒரு முறை இந்தியா முழுவதும் இருந்து திருநங்கைகள் கூடி விடுவர்.
அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு நிகழ்வே இந்த கோவில்தான்.இந்த கோவிலில் அரவான் களப்பலி என்ற விழா நடைபெறும் வரை மூன்று நாட்கள் இருந்து விழாவை சிறப்பித்து செல்வர்.
விழாவில் வருடா வருடம் மிஸ் கூவாகம் திருவிழா நடத்துவார்கள் .இதில் சிறந்த அழகியை திருநங்கையாக தேர்ந்தெடுத்திருப்பார்கள்.
இந்த வருடத்துக்கான மிஸ் கூவாகம் போட்டியில் 50 திருநங்கைகள் கலந்து கொண்டனர்.
இதில் 3 சுற்றுகள் கொண்ட போட்டியில் திருநங்கை மெகந்தி மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். திருச்சி ரியானா 2ம் இடத்தையும், சேலம் ஸ்வீட்டி 3ம் இடத்தையும் பிடித்தனர்.
