coronavirus
coronavirus

ஏப்ரல் 16ஆம் தேதிக்கான கொரொனாவின் நிலவரம் குறித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவல்!!

கொரானாவின் தாக்கம் நாளுக்கு நாள் உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை இந்திய அரசாங்கம் கையாளண்டு வருகிறது. இதன்படி, தமிழகத்தில் நேற்றைய தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,242 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 11,933 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் கொரோனா பாதிப்பு 11,439 லிருந்து 11,933 ஆக உயர்வு; இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 377லிருந்து 392 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,306லிருந்து 1,344 ஆக அதிகரிப்பு; என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து,
1. அமெரிக்காவில் அதிகபட்சமாக 28,529 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்;
2. இத்தாலி – 21,645, ஸ்பெயின் – 18,812, பிரான்ஸ் – 17,167, இங்கிலாந்து – 12,868 பேர் கொரொனாவால் பலி;
3. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,82,822 ஆக அதிகரிப்பு;
4. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,34,603 ஆக உயர்ந்துள்ளது;
5. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,10,046 ஆக உயர்வு! என்ற தகவலும் கிடைத்துள்ளது.