அமைச்சர்கள் யாருக்கும் ஆங்கிலம் தெரியாது: அண்ணாமலை- பதில் வீடியோ கொடுத்த திமுக

அமைச்சர்கள் யாருக்கும் ஆங்கிலம் தெரியாது: அண்ணாமலை- பதில் வீடியோ கொடுத்த திமுக

பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை திமுகவுக்கு எதிரான கருத்துக்களை அதிரடியாக தெரிவித்து வருகிறார். அப்படி அவர் அதிரடியாக நேற்று தெரிவித்த கருத்து என்னவென்றால்,

தமிழக அமைச்சர்கள் யாருக்கும் ஆங்கிலம் தெரிவதில்லை. அவர்களாக டெல்லிக்கு விமானத்தில் சென்று ஏதாவது ஒரு மக்களின் திட்டத்தை கோரிக்கையை பற்றி பேசியோ சொல்லியோ அவர்களால் வர முடியாது.

உதவியாளர் இன்றி அவர்களால் அந்த விசயத்தை செய்ய முடியாது என அண்ணாமலை கூறி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக திமுக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், அன்பில் மகேஷ், மனோ தங்கராஜ், சிவசங்கர் ஆகியோர் ஆங்கிலத்தில் உரையாடுவது போன்ற வீடியோவை திமுக வெளியிட்டுள்ளது