Connect with us

பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் அளித்த பதிலால் குழப்பம்!

Corona (Covid-19)

பள்ளிகள் திறப்பது எப்போது? அமைச்சர் அளித்த பதிலால் குழப்பம்!

தமிழகத்தில் ஊரடங்கு முடிந்த பின்பு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற கேள்விக்கு செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி ஆண்டு இறுதி தேர்வுகள் நடத்தப்படாத சூழலில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் மே 3 ஆம் தேதிக்குப் பின் தேர்வு தேதிகள் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ‘ஊரடங்கு பிரச்சனை முடிந்த பிறகு மத்திய, மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்ட பின், பள்ளிகளைத் திறப்பது குறித்து ஒரு குழு அமைத்து, ஆய்வு மேற்கொண்ட பின்னர் அறிவிக்கப்படும். தமிழக அரசைப் பொறுத்தவரை பள்ளிகள் திறக்கப்பட்ட பின் வழங்கப்பட வேண்டிய பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், ஷூ, சாக்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தயார் நிலையில் உள்ளன’ எனக் கூறியுள்ளார்.

More in Corona (Covid-19)

To Top