குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு குடும்ப தலைவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.நிதி நெருக்கடி காரணமாக இந்த வாக்குறுதி செயல்படுத்தாமல் உள்ளதாக திமுக சார்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையில், திமுக தேர்தலுக்காக கொடுத்த வெற்று வாக்குறுதி இது என்றும் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும், இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் முறைப்படி அறிவிப்பார் என்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார்.