தமிழக நிதித்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் பிடிஆர் தியாகராஜன். மதுரையை சேர்ந்த இவர் பதவியேற்ற நாள் முதல் தினமும் ஏதாவது அரசு நிர்வாக ரீதியாக பேட்டி கொடுப்பவர் இன்று அமைச்சர் அவர்கள் கோட்டையை விட்டு வெளியே வந்தபோது பின்னங்கால் இல்லாத ஒரு நாய்க்கு அவர் உதவி செய்துள்ளார். இது சம்பந்தமான அமைச்சரின் சமூக வலைதள பதிவு
கோட்டையை விட்டு வெளிவரும்போது 3 கால்களில் தத்தி செல்வதை கண்டு காரை விட்டு இறங்கி அருகே சென்று பார்த்தேன். விபத்தில் பின்னங்காலில் காயம் ஏற்பட்டதாக அங்கு பணியாற்றும் காவலர்கள் என்னிடம் தெரிவித்தனர்.
5 நான்கு கால் குழந்தைகளை கொண்ட எனக்கு, உடனே உதவிட தோன்றியது.
இப்பொது பாதுகாப்பான மிகச் சிறந்த மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளோம். விரைவில் நலம் பெற்று திரும்பியவுடன் என் அலுவலக நண்பராக கோட்டையில் சந்திப்பேன்.
உதவிய அனைவருக்கும் நன்றி. இவ்வாறு அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.