மைக்கேல் மதனகாமராஜன் பட புகழ் பீம்பாய் பிரவீன்குமார் காலமானார்

மைக்கேல் மதனகாமராஜன் பட புகழ் பீம்பாய் பிரவீன்குமார் காலமானார்

1980களின் இறுதியில் தூர்தர்ஷனில் வந்த மஹாபாரத தொடர் மிக புகழ்பெற்ற தொடராகும். இந்த தொடரில் பீமனாக நடித்தவர் பிரவீன் குமார் சோப்தி இந்த தொடரில் பீமனாக நடித்தார்.

மஹாபாரதத்தில் நடித்ததை விட 1990ம் ஆண்டு தமிழில் வந்த மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் பீம்பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததில் மிக புகழ்பெற்றார் இவர்.

அந்த படத்தின் இறுதி காட்சியில் இவர் ஏறிய உடனே மலை உச்சியில் இருக்கும் பங்களா இடிந்து விழுவது போல நகைச்சுவை காட்சி வரும்.

கமலுக்கு பாடிகார்டாக இவர் நடித்திருந்தார்.

1947ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி பிறந்தவர் பிரவீன் குமார் சோப்தி, இந்தியில் ஜித்தேந்திரா நடிப்பில் வெளியான ரக்‌ஷா படத்தின் மூலம் அறிமுகமானார். ஏராளமான அமிதாப் பச்சன் படங்களிலும் இவர் நடித்துள்ளார். பார்டர் செக்யூரிட்டி ஃபோர்ஸில் தனது இளமைக்கால வாழ்க்கையை ஆரம்பித்த இவர், வட்டு எறிதல் வீரராக விளையாட்டுத் துறையிலும் அசத்தினார்.ஏராளமான படங்களில் நடித்து பிரபலமான பிரவீன் குமார் சோப்தி, ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். 2013ம் ஆண்டு வாசிர்ப்பூர் தொகுதியில் தோற்ற இவர், பிறகு பாஜவில் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த சில நாட்களாக உடல்நிலை குன்றியிருந்த பிரவீன் குமார் சோப்தி, மும்பை வீட்டில் நேற்று முன்தினம் இரவு மாரடைப்பால் காலமானார்.