பிரபல குத்துச்சண்டைவீரர் மைக் டைசன் இவர் கடும் கோபக்காரர். பலமுறை ஏற்கனவே விமர்சனத்துக்குள்ளானவர்தான். இவரின் குணம் தெரியாமல் ஒரு பயணி அவரிடம் கடுமையான அடிகள் வாங்கியுள்ளார்.
கொஞ்சம் கோபக்காரரான மைக் டைசன் சம்பவத்தன்று சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து மற்றொரு நகருக்கு செல்லும் விமானத்தில் ஏறியுள்ளார்.
இவரை பார்த்த சக பயணிகள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டியுள்ளனர். அவரும் சளைக்காமல் எல்லோருக்கும் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார்.
அதில் இரண்டு நண்பர்களும் மைக் டைசனுடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.
அதில் ஒருவர் மைக் டைசனை பார்த்த மகிழ்ச்சியில் தொடர்ந்து கூச்சலிட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். இதை பார்த்ததும் மைக் டைசன் கொஞ்சம் பொறுமையாக தான் இருந்துள்ளார்.
ஆனால் உற்சாகத்தின் எல்லைக்கு சென்ற அவர் மைக் டைசனை ஓவராக சீண்டியுள்ளார் இதனால் கோபமுற்ற மைக் டைசன் எழுந்து தாறுமாறாக அடித்ததில் அந்த நபருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமான வீடியோ வைரலாகியுள்ளது.