Connect with us

Latest News

மெட்டி ஒலி உமா மகேஸ்வரி மறைவு- வருத்தத்தில் பிரபலங்கள்

கடந்த 2002ம் ஆண்டு சன் டிவியில் வெளியான மெட்டி ஒலி சீரியலில் விஜி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் திருமுருகனின் மனைவியாக நடித்தவர் உமா மகேஸ்வரி.

இவர் வெற்றிக்கொடி கட்டு அல்லி, அர்ஜீனா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

கால்நடை மருத்துவர் ஒருவரை மணம்புரிந்துள்ள இவர் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் ஈரோட்டில் உள்ள தன் தாயார் வீட்டுக்கு சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார்.

இவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்ததில் இவர் இறந்தது தெரிய வந்தது.

உடனே அவரது உடல் சென்னை காட்டுப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு தகனம் செய்யப்பட்டது.

உமா மகேஸ்வரியின் மறைவு சின்னத்திரை நடிகர் நடிகைகள் மத்தியில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாருங்க:  ரஜினி கட்சி குறித்து ஸ்டாலின்

Entertainment

ஆண்பாவம் படத்துக்கு 36 வயது

இயக்குனர் பாண்டியராஜனின் இரண்டாவது படமாக வெளிவந்தது ஆண்பாவம் திரைப்படம். இயக்குனர் பாக்யராஜை குருநாதராக கொண்டதாலோ என்னவோ இவரின் படங்கள் ஹோம்லியாகவும் அதே நேரத்தில் நகைச்சுவை சரவெடிகளுடன் கொண்ட காட்சியமைப்பிலும் இவரின் படங்கள் வேற லெவலில் இருக்கும்.

இவரின் ஆண்பாவம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படம்.இன்றைய இளசுகளாலும் கொண்டாடப்படும் படம். பாண்டியன்,பாண்டியராஜன், கொல்லங்குடி கருப்பாயி, வி.கே ராமசாமி என பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு மிகவும் கலகலப்பாக இப்படத்தை இயக்கி இருந்தார் பாண்டியராஜன்.

சீதா, ரேவதி கதாநாயகிகளாக நடித்தனர். குறிப்பாக இளையராஜாவின் பாடல்கள் மிகப்பெரும் பலம்,அதை விட பின்னணி இசை மிகப்பெரும் பலம் என்றே சொல்லலாம். படத்தில் அடிக்கடி வரும் ஒரு ஃப்ளூட் பின்னணி இசை இன்றளவும் பலரை கவர்ந்துள்ளது.

பாண்டியராஜனுக்கு பெரிய சாதனை சரித்திரம் படைத்த இப்படம் வெளியாகி இன்றுடன் 36 ஆண்டுகள் ஆகிறது.

பாருங்க:  ரோபோ மூலம் கொரோனா நோயாளிகளுக்கு உணவு கொடுக்க திட்டம் – தமிழகத்தில் எங்கு தெரியுமா?
Continue Reading

Latest News

அதிக எதிர்பார்ப்பில் ஆர் ஆர் ஆர் டிரெய்லர்

இந்தியாவிலேயே மிக பிரமாண்டமாக படம் இயக்குபவர் என்ற பெயரை குறுகிய காலங்களிலேயே பெற்றவர் எஸ்.எஸ் ராஜமவுலி. இசையமைப்பாளர் எஸ்.எஸ் கீரவாணி என்ற மரகதமணியின் சகோதரர் இவர்.

இவரின் மாவீரன், நான் ஈ, பாகுபலி சீரிஸ் படங்கள் எல்லாமே மிக பிரமாண்டமாகவும் வித்தியாசமான முறையில் இருந்ததாலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் சுதந்திர போராட்ட காலத்தை மையமாக வைத்து ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என். டி. ஆர் இருவரையும் நாயகர்களாக வைத்து ஆர்.ஆர். ஆர் படம் இயக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே வந்த படங்களின் வெற்றியால் இப்படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இயக்குனர் ராஜமவுலிக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் அதிகம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் வரும் 9ம் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பாருங்க:  பிரியங்கா மோகனின் முதல் தமிழ்பட பர்ஸ்ட் லுக்
Continue Reading

Entertainment

அல்லு அர்ஜூன் நடிக்கும் புஷ்பா படத்தின் டிரெய்லர்

அல்லு அர்ஜீன் நடிக்கும் புஷ்பா படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

பாருங்க:  ரஜினி கட்சி குறித்து ஸ்டாலின்
Continue Reading

Trending