மெட்ரோ ட்ரெய்னில் பயணம் செய்த பவன் கல்யாண்

மெட்ரோ ட்ரெய்னில் பயணம் செய்த பவன் கல்யாண்

ஆந்திராவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் பவன் கல்யாண். இவர் நடித்த சில படங்களின் வெற்றியால் இவர் சில காலங்களிலேயே முன்னணி நடிகராக உயர்ந்தார் இவர் நடித்த தொழி பிரேமா போன்ற படங்கள் இவரின் சினிமா கிராஃபை ஏற்றி விட்டது என கூறலாம்.

நடிகர் சிரஞ்சீவியின் தம்பியாக இருந்தாலும் தான் தேர்ந்தெடுத்த கதைகள் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் முன்னுக்கு வந்தவர் இவர். ஜனசேனா என்றொரு கட்சியை ஆரம்பித்து அதை திறம்பட நடத்தி வருகிறார்.

பவர் ஸ்டார் என ஆந்திர ரசிகர்களால் அழைக்கப்படும்  இவர் திடீரென இன்று மெட்ரோ ரயிலில் பயணம் செய்திருக்கிறார் வகீல் சாப் என்ற படத்தின் ஷூட்டிங்குக்காக திடீரென அவர் மெட்ரோவில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.