மெரினாவில் நண்பர்கள் தகராறில் நண்பரின் கண் தோண்டி எடுப்பு

19

இருவருக்குள் சண்டை வந்து விட்டால் என்ன செய்வதென்றே தெரியாமல் ஏதாவது விபரீதம் செய்து விடுகிறார்கள். அந்தக்காலத்து செய்திகளில் காதை கடித்து துப்பியவர் கைது என்றெல்லாம் நியூஸ் போடப்பட்டது.

இது போல இன்று வந்திருக்கும் செய்தி ஆச்சரியமானதாக இருந்தாலும் வருத்தமான விசயம்தான்.

தென்காசி மாவட்டத்தை  சேர்ந்த அசோக சக்கரவர்த்தி, பெரிய பாண்டியன். இருவரும் சென்னையில் உள்ள டீக்கடையில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சென்னை மெரினா கடற்கரையில் மது அருந்தியுள்ளனர். மதுபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பெரிய பாண்டியனின் தாயை பற்றி அசோக சக்கரவர்த்தி மோசமாக பேசியதால் அவர் அசோக சக்கரவர்த்தியுடன் சண்டையில் ஈடுபட்டுள்ளார். மோதல் முற்றவே அசோக சக்கரவர்த்தியின் இரு கண்களையும் நோண்டி எடுத்துவிட்டார் பெரிய பாண்டியன். மதுபோதையில் நிகழ்ந்த இந்த விபரீத மோதலை காவல் கட்டுப்பாடு அறைக்கு போன் செய்து கூறியுள்ளார் பெரிய பாண்டியன். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்தனர். கண்கள் பறிபோன அசோக சக்கரவர்த்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாருங்க:  ஓடிடியில் வெளியாகும் த்ரிஷ்யம் 2