Connect with us

போதைக்காக இதைக் கூடவா குடிப்பது? தீவிர சிகிச்சையில் மூன்று பேர்!

Corona (Covid-19)

போதைக்காக இதைக் கூடவா குடிப்பது? தீவிர சிகிச்சையில் மூன்று பேர்!

பெரம்பலூரில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஸ்பிரிட்டைக் குடித்த மூவர் உடல்நலம் குறைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 21,00,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் 13500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1267 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் நாடெங்கும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. முதலில் அறிவித்த ஏப்ரல் 14 அன்று முடிந்த நிலையில் மேலும் 20 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது ஒருபுறமிருக்க மது கிடைக்காத மன உளைச்சலில் தமிழகத்தில் பல இடங்களில் இதுவரை 10க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் நடந்து வருகின்றன. இதையடுத்து பெரம்பலூர் மாவட்டம் சங்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதீஸ்(28), திருவள்ளுவர் நகரைச்சேர்ந்த ரமேஷ்( 34) மற்றும் திருநகரைச் சேர்ந்த கார்த்திக்ராஜா(24)  ஆகிய மூவரும் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஸ்பிரிட்டை போதைக்காக குடித்துள்ளனர். இதனால் சிறிது நேரத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

More in Corona (Covid-19)

To Top