மெல்ல திறந்தது கதவு ஹிட் படமா

82

80களில் சினிமாவில் உச்சத்தில் இருந்தவர் நடிகர் மோகன். இவர் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் தவம் கிடந்தது உண்டு. இவரே எதிர்பார்க்காத பல படங்கள் கூட பெரிய அளவில் ஹிட் ஆனது. ஆனால் எதிர்பார்த்து பார்த்து பார்த்து செய்த படம் மெல்ல திறந்தது கதவு படம் பெரிய அளவில் போகவில்லையாம்.

இப்போது அந்த படம் கொண்டாடப்படுகிறது மெல்ல திறந்தது கதவு திரைப்படம் கடந்த 1986ல் வெளியானது. அப்போது இயக்குனர் சுந்தர்ராஜனும் பிஸியானவர் மோகனும் பிஸியானவர் . மெல்ல திறந்தது கதவு படம் ஏவிஎம் என்ற மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரித்த படமாகும். அது மட்டும் அல்லாமல் எம்.எஸ்.விஸ்வநாதனும் இளையராஜாவும் கூட்டணி சேர்ந்து இசையமைத்த படமாகும் அப்படி இருந்தும் படம் பெரிய ஹிட் இல்லை.

ஆனால் பாடல்கள் பேசப்பட்டன. இப்படத்திற்கு ஓரளவு வலிமை சேர்த்தது பாடல்களும் இசையும்தான். படம் வந்த சமயத்தில் படம் சரிவர போகாததை பார்த்த மதுரை விநியோகஸ்தர் ஒருவர் படத்தின் பின்னால் உள்ள காட்சிகளை முன்னாலும், பின்னால் உள்ள காட்சிகளை முன்னாலும் சேர்த்தார்களாம் படம் ஓரளவு வெற்றி கண்டது.

இப்படம் பற்றி பேசியுள்ள பத்திரிக்கையாளரும் இயக்குனருமான சித்ரா லட்சுமணன் அவர்கள் , படத்தின் ரீல் மாற்றப்பட்டது குறித்து கூறியுள்ளது, இரண்டும் மூணும் கூட்டினாலும் அஞ்சுதான் மூணம் இரண்டும் கூட்டினாலும் அஞ்சுதான் என கருத்து கூறியுள்ளார். எப்படி பார்த்தாலும் மெல்ல திறந்தது கதவு மிகப்பெரிய வெற்றிப்படம் என கூற முடியாது என்று கூறியுள்ளார்.

பாருங்க:  ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் விஜய் சந்திப்பு