மெய் படத்தின் மிரட்டலான ஸ்னீக் பீக் வீடியோ…

மெய் படத்தின் மிரட்டலான ஸ்னீக் பீக் வீடியோ…

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள மெய் திரைப்படத்தின் மிரட்டலான ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

இளம் இயக்குனர் பாஸ்கர் இயக்கியுள்ள ‘மெய்’ திரைப்படம் மருத்துவ துறையில் உள்ள முறைகேடுகள் குறித்து பேசுகிறது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் சார்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், காவல்துறையினர் எப்படி அதிகார வர்க்கத்தினருக்கு அடிபணிந்து பொதுமக்களிடம் அநாகரீகமாக செயல்படுகிறார்கள் என்பது தோலுரித்து காட்டப்பட்டுள்ளது.