தொழிலதிபருக்கு கொலை மிரட்டல் – மீரா மிதுன் விரைவில் கைது?

216

Meera mithun may be arrested soon – சென்னையில் தொழிலதிபர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீரா மிதும் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் மீரா மிதுன். ஆனால், உள்ளே பலரிடமும் அவர் மோதல் போக்கை கடைபிடித்தார். சேரன் மீது அபாண்டமாக பாலியல் புகார் கூறினார். இதனால் ரசிகர்களின் அதிருப்திக்கு ஆளாகி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இவருக்கு சென்னை எழும்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஜோமைக்கேல் என்பவருன் 2017ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. நண்பர்களாக பழகி வந்த அவர்களிடையே சில மாதங்களுக்கு முன்பு பணப்பிரச்சனை மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக காவல்நிலையத்தில் இருவர் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மீராமிதுன், தன்னை ஆபாசமாக திட்டியதோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக ஜோமைக்கேல் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனவே, 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விரைவில் அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தவுள்ளனர். அவர் கைதாகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பாருங்க:  ரூ.2,000 நிதியுதவி! சென்னையில் அனைவருக்கும் கிடைக்குமா?