மீண்டும் நடிக்க வரும் மீரா ஜாஸ்மின்

22

ரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். மீரா ஜாஸ்மினுக்கு ரன் இரண்டாவது படம் முதல் படம் 2001ல் வெளியான சூத்ரதாரன் என்ற மலையாள படம் ஆகும்.

பல மொழிகளில் பிசியான அவர், மலையாளத்துக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்தார். தேசிய விருதும் வாங்கினார். தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் ஜோடியாக நடித்த சண்டக்கோழி படம், மீண்டும் மீரா ஜாஸ்மினை தமிழில் பிசியாக்கியது.

தமிழில் அஜீத், விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்த மீரா ஜாஸ்மின் கடந்த 2014ல் ஜான் டைடஸ் என்பவரை திருமணம் செய்த இவர் திடீரென்று உடல் எடை கூடினார். இந்த நிலையில்தான் மீண்டும் அவரை மலையாளத்தில் நடிக்கும்படி கேட்டனர். உடனே கடுமையான உடற்பயிற்சிகள் மூலமாக உடல் எடையை குறைத்த மீரா ஜாஸ்மின், தற்போது சத்தியன் அந்திக்காடு இயக்கும் படத்தில் ஜெயராம் ஜோடியாக நடிக்க கால்ஷீட் கொடுத்துள்ளார். வரும் ஜூலை மாதம் இறுதியில் கேரளாவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

பாருங்க:  மணிரத்னம் படத்தில் ஆதி - பொன்னியின் செல்வன் அப்டேட்
Previous articleகமலின் விக்ரம் படத்தில் வில்லன் விஜய் சேதுபதியா
Next articleசத்யராஜ் பெயர்தான் முதலில்- சசிக்குமாரின் வேண்டுகோள்