Entertainment
இளையராஜா இசையில் மாயோன் பட பாடல் இன்று வெளியாகிறது
சிபிராஜ் நடித்து வரும் படம் மாயோன். இது பல நூற்றாண்டுகளுக்கு முன் உள்ள ஒரு ஸ்வாமி சிலையையும் அதன் பின்னணியில் உள்ள அமானுஷ்யங்களையும் அலசுகிறது.
ஆர்க்க்கியாலஜி டிபார்ட்மெண்ட்டை சேர்ந்தவராக இதில் சிபிராஜ் நடித்துள்ளார்.
இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் பெருமாளை வணங்கி பாடும் பாடல் ஒன்று இடம்பெற உள்ளது. இந்த பாடலை கர்நாடக பாடகிகளான ரஞ்சனி காயத்ரி சகோதரிகள் பாடியுள்ளனர்.
என். கிஷோர் எழுதி இயக்கும் இத்திரைப்படத்தை ‘டபுள் மீனிங் ப்ரொடக்சன்ஸ்’ தயாரிக்கிறது.
இப்படத்தின் இந்த பாடல் மாலை 5.30க்கு வெளியாகிறது.நடிகர் சிம்பு இப்பாடலை வெளியிடுகிறார்.
