மயில்சாமி மகன் திருமணம்- பிரபலங்கள் வாழ்த்து

மயில்சாமி மகன் திருமணம்- பிரபலங்கள் வாழ்த்து

பாண்டியராஜன் இயக்கிய கன்னிராசி திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் மயில்சாமி. கோயம்புத்தூரை சொந்த ஊராக கொண்ட இவர் தமிழ் சினிமாவில் வந்த பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார்.

காமெடி நடிகராக இருந்தாலும் பல்வேறு விசயங்களில் நல்ல ஞானம் உள்ளவர். தீவிர கடவுள் நம்பிக்கையுள்ளவர் மயில்சாமி.

இவரின் மகனின் திருமணம் இன்று நடைபெற்றது. இதில் பல திரைப்பட பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட நடிகர் பார்த்திபன் சென்னையும்,தேங்கும் மழைநீரும் போல..வாழ, அன்புப் புயல் விடாதடிக்க.. வாழ்த்தினேன். மயில்/மகன் திருமணத்தில்! என வாழ்த்தியுள்ளார்.