விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இன்னும் 6 மாதங்கள் கழித்து தீபாவளிக்குதான் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் கடந்த மாதம் நடந்தது. இந்நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக வேண்டிய திரைப்படம் கொரோனா ஊரடங்குக் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த படத்தின் டிரைலராவது வெளியாகுமா என விஜய் ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். மாஸ்டர் திரைப்படம் முதல் முறையாக 5 மொழிகளில் வெளியாக இருப்பதாக ஐனாக்ஸ் நிறுவனம் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் திரைப்படம் விஜய்யின் பிறந்தநாளான ஜுன் 22 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் ஊரடங்கு இப்போது முடியாத சூழ்நிலை நிலவுவதால் அந்த தேதியில் படத்தை ரிலீஸ் செய்வது கடினம் என்பதால் ரிலீஸ் தேதியை மீண்டும் தள்ளி வைத்துள்ளனர்.
தற்போதைய நிலையின் படி மாஸ்டர் திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட தயாரிப்பு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த ஏழு மாத தாமதத்தால் தயாரிப்பாளருக்கு பல கோடி ரூபாய் வட்டி கட்ட வேண்டிய சூழல் உருவாகி லாபத்தில் ஒரு மிகப்பெரிய தொகை குறைய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.