விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் 5 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் கடந்த மாதம் நடந்தது. இந்நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக வேண்டிய திரைப்படம் கொரோனா ஊரடங்குக் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்த படத்தின் டிரைலராவது வெளியாகுமா என விஜய் ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் பற்றி வேறொரு அப்டேட் வெளியாகியுள்ளது. மாஸ்டர் திரைப்படம் முதல் முறையாக 5 மொழிகளில் வெளியாக இருப்பதாக ஐனாக்ஸ் நிறுவனம் தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மாஸ்டர் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலிஸாக உள்ளது. இந்த தகவலை விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கிக் கொண்டாடி வருகின்றனர்.