மாஸ்டர் அப்டேட் டிரெண்டிங்கில்

மாஸ்டர் அப்டேட் டிரெண்டிங்கில்

இளையதளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். சென்ற வருட தீபாவளி முடிந்ததுமே இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது இந்த வருட தீபாவளி வந்தும் வருமா வராதா என இழுத்துக்கொண்டிருக்கிறது.

கடந்த ஏப்ரல் 14லிலேயே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய படம் கொரோனா ஊரடங்கால் வெளியாகாத நிலையில் ரசிகர்கள் படம் ஓடிடியில் வெளிவருமா என காத்திருந்தனர். அதற்காக அடிக்கொரு முறை அப்டேட் கொடுத்த பட டீம் கண்டிப்பாக படம் ஓடிடியில் வராது தியேட்டர் திறந்த பின் தான் வரும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தீபாவளிக்கு 2 நாட்கள் இருக்கும் நிலையில் தியேட்டர்கள் திறந்த நிலையில் இன்னும் படம் வெளிவரவில்லை.

இதற்கிடையே இன்று மாலை 6 மணிக்கு மாஸ்டர் படம் பற்றிய அப்டேட் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் இதை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.