விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் 14ல் ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய திரைப்படமாகும். கொரோனா பெருந்தொற்று காரணமாக கடுமையான லாக் டவுன் கடைபிடிக்கப்பட்டதால் தியேட்டர்கள், மால்கள் திறக்கப்படாத நிலையில் இப்படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை.
இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் சோர்ந்து போய் இருக்கிறார்கள். இதுவரை தியேட்டர் திறக்கப்படாத நிலையில் என்ன செய்வதென்று படக்குழுவினரும் முடிவெடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.
ஏற்கனவே இப்படம் ஓடிடியில் எல்லாம் ரிலீஸ் ஆகாது என தெள்ளத்தெளிவாக தயாரிப்பு தரப்பு சொல்லிவிட்டது. இன்னும் இப்படத்தின் டீசர் வெளியாகாத நிலையில் அந்த படத்தின் தயாரிப்பு தரப்பு விரைவில் டீஸர் வெளிவரும் என அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.