மாஸ்டர் படம் குறித்து நடிகர் நாசர் மனைவி கருத்து

35

சமீபத்தில் பொங்கலுக்கு வெளியாகி அரங்கு நிறைந்த காட்சிகளுடன் ஓடிக்கொண்டிருப்பது நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம். இப்படத்தில் சிறுவர் சீர்திருத்த பள்ளியின் வார்டனாக விஜய் நடித்துள்ளார்.

வில்லனாக பவானி என்ற வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படத்தை பற்றி பலரின் விமர்சனம் வந்துள்ள நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் நடிகர் நாசரின் மனைவியுமான கமீலா நாசர் இப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

கல்லூரியிலேயே ஜாதி ஒழிக்கப்பட வேண்டும், மாணவர்களுக்கு அரசியல் கற்றுத்தரவேண்டும் என்று அனைவரும் புரிந்து கொள்ளுமாறு விளக்கி கூறிய
நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ்க்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார் கமீலா.

பாருங்க:  சிறுவனைப் பாடகனாக்கிய லாரன்ஸ் – விஜய் & அனிருத்துக்கு நன்றி!