மாஸ்டர் படத்தை நெட்ப்ளிக்ஸ்க்கு விற்று விட்டதால் நெட்ப்ளிக்ஸில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தியேட்டர்களும் திறந்த நிலையில் இன்னும் மாஸ்டர் படத்தை வெளியிடவில்லை என்ற நிலையில் நெட்ப்ளிக்ஸில் படம் வந்து விடும் என ரசிகர்கள் நினைத்தனர். இருப்பினும் ரசிகர்களுக்கு விஜய் நடித்த படத்தை முதன் முதலில் ஓடிடியிலா பார்ப்பது என்ற மனநிலையில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் படம் தயாரித்த தயாரிப்பாளர் பிரிட்டோ சார்பில் இன்று பிரஸ் ரிலீஸாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மாஸ்டர் படம் முதலில் தியேட்டரில்தான் வெளியாகும் அதில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும் திரையரங்குகளில் வெளியிடவே விருப்பம் என தயாரிப்பாளர் தரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது திரையரங்குகளில் வெளியிட உரிமையாளர்கள் ஒத்துழைக்க வேண்டுமென கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
https://twitter.com/sathyaDP/status/1332700269323247616?s=20
https://twitter.com/sathyaDP/status/1332700269323247616?s=20