கடந்த ஏப்ரலில் வெளியாக வேண்டிய மாஸ்டர் திரைப்படம் திரையரங்கு திறந்தும் இன்னும் வெளியாகாமல் இருப்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். இந்த நிலையில் மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாகும் என செய்திகள் பரவின. பின்னர் இந்த செய்திகள் மறுக்கப்பட்டது.
விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஒரு வழியாக வரும் ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என தெரிகிறது.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அதிகம் அமலில் உள்ள நிலையில் பொங்கலுக்கு அப்படம் வெளியாகும்போது நிறைய கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என தெரிகிறது.
செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவும் இந்த செய்தியை உறுதிப்படுத்துவது போல் ரசிகர்களின் சிறப்புக்காட்சிக்கே அனுமதி கொடுக்கப்படும் என கூறியுள்ளார்.

















