மாஸ்டர் தயாரிப்பாளருக்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம்

55

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படம் கொரோனா பிரச்சினைகளால் தியேட்டருக்கு வர முடியாமல் இருந்த நிலையில் இதனுடன் வெளியாக வேண்டிய சூரரை போற்று படம் எல்லாம் ஓடிடியில் வெளியாகி விட்டது.

ஆனால் இப்பட தயாரிப்பாளர் மாஸ்டர் படம் தியேட்டரில் தான் வெளியாக வேண்டும் என்று உறுதியாக இருந்தார் அதன்படி படம் பொங்கலுக்கு தியேட்டரில் வெளியாகிறது.

இதனை திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் சுப்பிரமணியன் பாராட்டியுள்ளார் மாஸ்டர் படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ள சுப்பிரமணியன், மாஸ்டர் படக்குழு நினைத்தால் படத்தை ஓடிடியில் வெளியிட்டு இருக்கலாம் ஆனால் அப்படி செய்யவில்லை என அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பாருங்க:  மாஸ்டர் இசை வெளியீடு – ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி !